இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்!

0
140
உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் மிகவும் முக்கியமானது.
ஏனெனில் இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும்.
குறிப்பாக இரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் (காரணம் கர்ப்பம் மற்றும் மாதவிடாய் சுழற்சி) அதிகம் ஏற்படும்.
ஆகவே உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க வேண்டியது அவசியம்.
கருப்பு எள்ளு
இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை உணவின் மேல் தூவி சாப்பிடலாம் அல்லது எள்ளு மிட்டாய் வாங்கியும் சாப்பிடலாம். இதனால் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும்.
பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் இரவில் 2-3 பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு சாப்பிட்டு வருவது நல்லது.
ஆப்பிள்
ஆப்பிளில் கூட இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவையும் அதிகம் உள்ளது. அத்தகைய ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை நீங்கும்.
உலர் திராட்சை
உலர் திராட்சையில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆகவே இதனை தினமும் மாலை நேரத்தில் தீனிகள் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.
பீட்ரூட்
பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்த ஊறும் என்று சொல்வார்கள். ஏனெனில் பீட்ரூட்டில் ஃபோலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
மேலும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. எனவே பீட்ரூட்டை வாரம் ஒருமுறை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
நெல்லிக்காய்
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலில் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.
மாதுளை
மாதுளையில் இரும்புச்சத்து, புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் மற்ற கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை குணமாகும்.