உடல்நலத்திற்கு ஆரோக்கியம் தரும் நறுமணங்கள்!

0
223
நாம் உண்ணும் உணவுகளால் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் அதன் நறுமணங்களாலும் சில ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.
காபி
தினமும் 2 கப் காபி குடிப்பவர்கள் 14 சதவிகிதம் பக்கவாத நோய் வராமல் தவிர்க்கலாம் என சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அது மட்டுமல்ல, காபியில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்டுகள், பாதிப்படைந்த செல்களைப் புதுப்பித்து, கொலாஜன் அளவை அதிகரிப்பதால் சருமமானது பொலிவாகவும், மென்மையாகவும் இருக்கும்.
நறுமணம்
உண்மையில் காப்பியின் சுவையை விட, அதன் நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும். மேலும் அதன் நறுமணமே உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி, அதிக புத்துணர்ச்சியை தரும்.
சிட்ரஸ்
சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பது தெரியும்.
ஆகவே இவற்றை சாப்பிட்டால் இதில் உள்ள விட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தில் லைகோபைன் (lycophine) என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.
நறுமணம்
சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் நறுமணத்தை நுகர்ந்து பார்த்தால், குமட்டல் வருவதை தடுக்கும். மேலும் இந்த நறுமணம் மனதிற்கு ஒருவித சந்தோஷத்தை தரும்.
யூகலிப்டஸ்
மார்பு சளி அல்லது சுவாச பிரச்சினை இருந்தால், யூகலிப்டஸ் எண்ணெயை பயன்படுத்தலாம்.
மேலும், அளவுக்கதிகமான கூந்தல் உதிர்வு ஏற்பட்டால், யூகலிப்டஸ் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.
நறுமணம்
அதிகமான குளிர்ச்சியினால், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல் போன்றவை இருந்தால் அதனை சரிசெய்ய, 2 துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயை சிறு துணியில் விட்டு, அதனை அவ்வப்போது நுகர வேண்டும்.
ரோஜா
ரோஜா இதழ்களை சேகரித்து நிழலில் உலர்த்தி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி உட்கொள்ள கொடுத்துவர கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும். வாய்ப்புண்ணும் குணமாகும்.
ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலை, மாலை ஆகிய இருவேளை அப்படியே உட்கொண்டுவர சீதபேதி இரண்டொரு நாளில் குணமாகிவிடும்.
நறுமணம்
இரவில் தூங்கும் போது மனம் வருத்தத்தால், கெட்ட கனவுகள் வருகிறதா? அப்படியெனில் இரவில் தூங்கப் போகும் போது, ரோஜாவை நுகர்ந்து பார்த்து, மனம் அமைதியடைந்து, இரவில் நல்ல இனிமையான கனவுகள் வரும்.
சந்தனம்
தீக் காயங்களை ஆற்றும். தலை குளிர்ச்சிக்கும், சிறு வெட்டுப்புண்களை ஆற்றும் திறனுக்கும் சந்தனப்பூச்சு அவசியம். சந்தன எண்ணெய் ஒரு கிருமி நாசினி.
குழந்தைகளின் சருமத்தை மிருதுவாக வைத்திருக்கவும் அரிப்பு வியர்குரு போன்றவை வராமல் தடுக்கவும் உடலுக்கு மட்டும் இன்றி மனதையும் மகிழ வைக்கும் அரோமா (வாசனை) வைத்தியத்திற்கும் சந்தனம் பயன்படுத்தப்படுகின்றது.
நறுமணம்
சந்தனம் என்று சொன்னாலே, அது மனமை அமைதிப்படுத்தும் என்று நன்கு தெரிகிறது. எனவே தெளிவாக மனம் மற்றும் ஆர்வத்தை அதிகப்படுத்த, இந்த பொருள் சிறந்தது.
சொக்லேட்
சொக்லேட்டில் நிறைந்துள்ள இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம், கர்ப்பிணிகளின் உடலில் ஹீமோகுளோபினை சீராகப் பராமரிக்க உதவுகிறது.
டார்க் சொக்லேட் சாப்பிடுவதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும், மேலும் இதில் சர்க்கரை மற்றும் கொழுப்பு குறைவாக இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
நறுமணம்
சொக்லேட்டின் நறுமணத்தை நுகர்ந்து பார்த்தால், உடலில் உள்ள வலியானது பறந்து போய்விடும். அதிலும் மனஅழுத்தத்தினால் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்தால் அப்போது சிறிது சாக்லேட்டை நுகர்ந்து பாருங்கள்.
குங்குமப்பூ
குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும். கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.
நறுமணம்
மாதவிடாய் வருவதற்கு முன்னர், பெண்கள் ஒருவித மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். ஆகவே அத்தகைய மனஅழுத்தத்தை போக்க குங்குமப்பூவை நுகர்ந்தால், தவிர்க்கலாம்.