வீட்டை சுத்தம் செய்யும் எலுமிச்சை

0
255
பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சையை வைத்து வீட்டை சுத்தப்படுத்தலாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரையும், சோடா உப்பையும் கலந்து வைத்து கொள்ளுங்கள், இதனை கொண்டு சுத்தம் செய்தால் ஜன்னல் பளிச்சென மின்னும்.
எலுமிச்சை பழத்தை கட் செய்து, ஜிங்க் முழுவதும் தெளித்து விடுங்கள், பின்னர் கல் உப்பையும் தெளித்து நன்றாக தேய்த்தால் சுத்தமாகும்.
தரையை சுத்தம் செய்யும் போது, எலுமிச்சை பழத்தை சில துளிகள் பிழிந்து ஈரத்துணி கொண்டு துடையுங்கள், பின்னர் பத்து நிமிடங்கள் கழித்து வினிகர் மற்றும் உப்பு கலந்த தண்ணீரை கொண்டு துடைக்க வேண்டும்.
வீட்டின் கழிவறையை சுத்தம் செய்ய சிறிது எலுமிச்சை தண்ணீரை தெளித்து பின்னர், வினிகர் தெளித்து சுத்தம் செய்தால் பளபளவென மின்னும்.