ஞாபக சக்தியைத் தூண்டும் வல்லாரைக் கீரை

0
262

அனைவரும் விரும்பி சாப்பிடும் வல்லாரைக் கீரை மிகவும் சுவையாகவும், மருத்துவ குணம் நிறைந்ததாகவும் உள்ளது.

வல்லாரைக் கீரை நீர் அதிகம் நிறைந்துள்ளப் பகுதிகளில் தானாக வளரக் கூடியது.

இந்த கீரை வல்லமை மிக்கது என்பதால் இதற்கு வல்லாரை கீரை என்று பெயர் வந்தது.

இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் A, வைட்டமின் C மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.

பயன்கள்

வல்லாரைக் கீரையை ஒரு கைப்பிடியளவு எடுத்து அரைத்து சாப்பிட்ட பின்னர், பசும்பால் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மாலைக்கண் பாதிப்புகள் வராமல் தடுக்கும்.

குழந்தைகள் இந்த கீரையை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

வல்லாரைக் கீரையுடன் சிறிது மிளகை சேர்த்து பச்சையாக மென்று சாப்பிட வேண்டும். இதனால் உடலில் உள்ள சூடு தணியும்.

வல்லாரை இலையை தினமும் பச்சையாக மென்று விழுங்கினால் குடல்புண், வாய்ப்புண், வாய் துர்நாற்றம் போன்ற நோய்களில் இருந்து விடுபடலாம்.

வல்லாரை கீரையுடன், பாதாம், ஏலக்காய், மிளகு, கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதை பசும்பாலில் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் குடித்து வந்தால் இதயம் தொடர்பான நோய்கள் குணமாகும்.

வல்லாரை இலைச் சாற்றில் அரிசி மற்றும் திப்பிலியை ஊறவைத்து, அதை உலர்த்தி தூள் செய்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் நாள்பட்ட கபநோய்கள் மற்றும் இருமல் போன்றவைகள் குணமாகும்.

தினமும் காலையில் நான்கு வல்லாரைக் கீரையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்து அதை சாப்பிட்டால், உடல் வலிமை பெற்று, இனிமையான குரல் வளம் கிடைக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here