27 மார்., 2018

ஆலயங்களின் அற்புதங்கள்!

அஞ்சனைதேவி
ஹரித்துவாரில் உள்ள சண்டிதேவி கோயிலுக்கு அருகில் ஆஞ்சநேயரின் தாயாரான அஞ்சனைதேவிக்கு தனிக்கோவில் இருக்கின்றது.

அனுமனை மடியில் கிடத்தி, அவருக்கு தாய்பால் ஊட்டும் வகையில் இங்குள்ள விக்கிரகம் வடிவமைக்கப்பட்டிகருப்பது சிறப்பு.

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூரில் உள்ளது கோதண்டராமர் திருக்கோயில். இங்கே கருவறையில்நின்ற கோலத்தில் அருளும்  ரமான்,லட்சுமணர் மற்றும் சீதாதேவியின்(முலவர்) விக்கிரத் திருமேனிகள் சாளக்கிராமத்தில் ஆனது என்பர்.

மேலும், கருவறையில் அனுமனுக்குப் பதிலாக சுக்ரீவன் காட்சி தருவது இந்தத்தலத்தின் விசேசம். இந்த விக்கிரகங்களின் சுமார் 1400 ஆண்டுகள் பழைமையானவை என்கிறார்கள்.

பாடல் பெற்ற சிவதலங்களில் காவிரி வடகரையில், திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள திருத்தலம் திருக்கனூர் இங்குள்ள அம்பாள் திருநாமம் சிவலோகநாயகி. இந்த‌ அம்பாளின் விக்கிரகம் முழுவதும் சளாக்கிராமத்தால் ஆனது!

திருநெல்வேலி பாபநாசம் திருத்தலத்தில் உள்ள சிவலிங்கம், ருத்ராட்சத்தால் ஆனது. இதுபோன்ற சிவலிங்கத்திருமேனியை வேறெங்கும் காண்பது அரிது.