ஆஸ்துமாவைக் குணமாக்கும் தவசு முருங்கை இலை

0
241
தவசு முருங்கைச் செடி முழுவதுமே மருத்துவப் பலன்களைக்கொண்டது எனினும், இதன் இலைகள் சற்று சிறப்பு வாய்ந்தவை. இதன் இலைச்சாற்றை அருந்திவந்தால் இரைப்பு (ஆஸ்துமா), இருமல், ஜலதோஷம் குணமாகும்.
குழந்தைகளுக்கு மழைக் காலத்தில் சளிப் பிடித்துக்கொள்ளும். இந்த சமயங்களில் தவசு முருங்கை இலைச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குழந்தைக்குக் கொடுக்கலாம்.
இதன் இலைச்சாற்றை இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என ஒருவாரத்துக்குப் பருகிவந்தால், இரைப்பு நோயின் தீவிரம் குறையும்.
முழுச் செடியையும் நிழலில் உலர்த்தி, நன்றாகப் பொடித்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு பொடி இருக்கிறதோ அதே அளவுக்குச் சர்க்கரையும் சேர்த்து, நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும்.
இப்போது, அரை தேக்கரண்டி தவசு முருங்கை மற்றும் சர்க்கரை கலந்த பொடியுடன், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து, நன்றாகக் குழைத்து காலை, மாலை என ஏழு நாட்களுக்கு சாப்பிட்டுவந்தால் சளி, இருமல் தொந்தரவுகள் நீங்கும்.
தவசு முருங்கை இலைகளை இடித்து, வதக்கி அடிபட்ட காயம், வீக்கம் ஆகியவற்றின் மீது பற்று போட்டால், அவை விரைவில் குணமாகும்.
தவசு முருங்கையின் இலைகள் மிகுந்த கசப்புச் சுவை கொண்டவை என்பதால், எப்போதும் தேன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.
தவசு முருங்கையின் இலைச்சாற்றை 15-30 மி.லி எடுத்து அருந்திவந்தால், பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பின் கர்ப்பப்பையில் ஏற்படும் அழுக்குகள் நீங்கும்.
தவசு முருங்கைக் கீரை. தவசிக் கீரை என்பது வேறு என்பது வேறு இரண்டும் வெவ்வேறு மருத்துவப் பலன்களைக் கொண்டவை.