காய்கறிகளை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள்!

0
283
இன்றைய நவீன உலகில் சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை சாப்பிடுபவர்களே அதிகம்.
காய்கறிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவதற்கு சோம்பேறி பட்டுக்கொண்டு, மட்டன், சிக்கனை வாங்கி சமைத்து உண்ணுகிறார்கள், அதுமட்டுமின்றி மிஞ்சிய உணவுகளை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து மறுநாளும் சூடு செய்து சாப்பிடுகிறார்கள்.
விளைவு, மாரடைப்பு, கொழுப்பு சார்ந்த பிரச்சனைகள், புற்றுநோய்கள் போன்றவற்றிற்கு ஆளாகிறோம்.அதனால் அசைவ உணவுகளை சாப்பிட்டாலும், அன்றாட வாழ்வில் ஏதேனும் 2 காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், காய்கறிகளில் இருந்து மாவுச்சத்து, புரதம், தாது உப்புகள், விட்டமின்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை கிடைக்கிறது.
காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்
நார்ச்சத்து: காய்களில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தூண்டி, மலச்சிக்கலை தவிர்க்கிறது. உணவுக் குழாயில் உணவு எளிதாக பயணிக்க உதவும்.
விட்டமின் சத்து: பச்சை இலை காய்களில், கீரைகளில் தான் அதிகளவில் விட்டமின் இருக்கிறது. முக்கியமாக கரோட்டின் இருக்கிறது.
கரோட்டின் நம் உடம்பில் விட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இது கண் பார்வையை சீராக்குகிறது. மாலைக்கண் நோயை தடுக்கிறது. கீரை வகைகளில் கரோட்டினுடன் ரைபோபிளேவின் மற்றும் “விட்டமின் சி’யும் அதிகளவில் உள்ளது.
தாது உப்புகள்: தண்டுகீரை, அகத்தி, வெந்தயக் கீரை மற்றும் முருங்கைக் கீரையில் கால்சியம் அதிகளவில் காணப்படுகிறது. கீரை வகைகளில் இரும்புச் சத்தும் நிறைந்து காணப்படுகிறது.
தினமும் நம் உணவுடன், 50 கிராம் கீரையை சேர்த்துக் கொண்டால் நமக்கு ஒரு நாளைக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம், கரோட்டின், விட்டமின் சி ஆகியவை கிடைத்துவிடும்.
ஆகவே அன்றாடம் காய்கறிகளை உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வை பெறுங்கள்.