பைல்ஸ் பிரச்சனைக்கான சில கிராமத்து வைத்தியங்கள்

0
238

பைல்ஸ் என்னும் மூல நோய் ஆசனவாய் மற்றும் மலக்குடலின் நரம்புகளில் அழற்சி ஏற்பட்டு, வீக்கமடைவதால் ஏற்படும் நிலையாகும்.

இந்த பைல்ஸ் பிரச்சனை எந்த வயதினருக்கும் வரலாம். குறிப்பாக யார் ஒருவர் மலச்சிக்கலால் அதிகமாக அவஸ்தைப்படுகிறார்களோ, அவர்களுக்கு பைல்ஸ் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

மேலும் பைல்ஸ் பிரச்சனையானது ஒருவருக்கு உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் போது, பரம்பரை, நார்ச்சத்து குறைவான டயட்டைப் பின்பற்றுதல், உடல் பருமன், போதிய உடல் உழைப்பு இல்லாமை, கர்ப்பம், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அல்லது நின்று கொண்டிருப்பது என பல காரணங்களால் வரும்.

பைல்ஸ் ஒருவருக்கு இருந்தால், அவருக்கு மலம் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் மற்றும் வலியை உணர்வதோடு, சில நேரங்களில் இரத்தக்கசிவும் ஏற்படும். அதிலும் கோடையில் அதிகமாக வெயில் கொளுத்துவதால், பைல்ஸ் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பைல்ஸ் பிரச்சனைக்கான சில கிராமத்து வைத்தியங்கள் 

வெதுவெதுப்பான நீரில் 20 நிமிடம் உட்கார வேண்டும். இப்படி தினமும் மூன்று முறை செய்து வர, பைல்ஸ் மூலம் மலப்புழையில் ஏற்படும் எரிச்சல் முழுமையாக தடுக்கப்படும்.

நார்ச்சத்து குறைவான உணவுப் பொருட்களை உட்கொள்வதால், குடலியக்கம் பாதிக்கப்பட்டு, அதனால் பைல்ஸ் வருகிறது. ஆனால் நீர்ம பானங்களை அதிகம் பருகுவதோடு, நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களையும் உட்கொண்டு வந்தால், அவை மலத்தை இளகச் செய்து, குடலியக்கத்தை சீராக்கி, பைல்ஸ் பிரச்சனையில் இருந்து மெதுவாக விடுபடச் செய்யும்.

அதற்கு ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி, திணை போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.   ஐஸ் கட்டிகளை பாதிக்கப்பட்ட இடமான மலப்புழையில் சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், அப்பகுதியில் உள்ள இரத்த நாளங்களில் இருந்த வீக்கம் குறைந்து, வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கற்றாழையின் நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் சிகிச்சைப் பண்புகள், பைல்ஸால் ஏற்படும் எரிச்சலைக் குறைக்க உதவும். அதற்கு கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் வலி மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

எலுமிச்சை சாற்றினை ஒரு பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ, லேசான எரிச்சலை உணர நேர்ந்தாலும், விரைவில் பைல்ஸ் பிரச்சனை நீங்கும்.

பாதாம் எண்ணெயை பாதிக்கப்பட்ட மலப்புழையில் தடவினால், எரிச்சல் மற்றும் அரிப்பில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

ஆலிவ் ஆயிலில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை, பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வளிக்க உதவும்.
அதற்கு தினமும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலைப் பருகலாம் அல்லது அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மசாஜ் செய்து வர மூல நோயில் இருந்து விடுபடலாம். ஒரே இடத்தில் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்வதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் ஒருசில உடற்பயிற்சிகளை செய்து வருவதன் மூலம் பைல்ஸை குணப்படுத்தலாம். முக்கியமாக வெயிலில் அதிகம் சுற்றுவதைத் தவிர்த்திடுங்கள்.