தொப்பையைக் குறைக்கும் தூதுவளை சூப்

0
362
மூலிகை வகைகளில் ஒன்றான தூதுவளையில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன.
தேவையானவை
தூதுவளை அரைக் கட்டு, தக்காளி, வெங்காயம் 1, பூண்டு பல் 2, கொத்தமல்லித்தழை சிறிதளவு, மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, வெண்ணெய் ஒரு டீஸ்பூன்.
செய்முறை
தக்காளியை அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தூதுவளைக் கீரையை, முள் நீக்கி சுத்தம் செய்யவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை போட்டு சூடாக்கி நறுக்கிய வெங்காயம், பூண்டு, தூதுவளை சேர்த்து வதக்கவும்.
அரைத்த தக்காளி விழுது, 4 டம்ளர் நீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 10 நிமிடங்கள் கழித்து, கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். தக்காளி விழுதுக்குப் பதில் வேகவைத்த பருப்புத் தண்ணீர் சேர்க்கலாம்.
பலன்கள்
கப நாசினி. ஆஸ்துமா அலர்ஜி, காது மந்தம், சளி, இருமல், கக்குவான் விலகும். தாது விருத்தியாகும். கை, கால் அசதியைப் போக்கும்.
நரம்புத் தளர்ச்சியைச் சரிசெய்யும். தலைவலி மற்றும் காது, மூக்கு வலிகளுக்கு நிவாரணம் தரும். பசி, ஜீரணத்துக்கு நல்லது. ஊளைச்சதை, தொப்பையைக் குறைக்கும்.