இடுப்பு வலிக்கு நிவாரணம் தரும் உளுத்தம் புட்டு

0
262
உளுந்தில் அதிக அளவிலான சத்துக்கள் அடங்கியுள்ளன, இதில் உணவுகளை செய்து சாப்பிடுவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம்.
தேவையானவை
தோல் உள்ள உளுந்து – 200 கிராம், புழுங்கல் அரிசி – 100 கிராம், தேங்காய் – ஒரு மூடி, நெய், நல்லெண்ணெய் – 3 ஸ்பூன், உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் – தேவையான அளவு.
செய்முறை
உளுந்தையும் அரிசியையும் தனித்தனியே நன்றாக ஊறவைத்து, கழுவிச் சுத்தம் செய்து, இரண்டையும் ஒன்றாகச் சேர்க்கவும். இதில், தேவையான அளவு உப்பு போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து, கெட்டியாக, சற்றே கரகரப்பான பதத்தில் எடுக்கவும்.
பிறகு, ஆவியில் புட்டு மாதிரி உதிராக வேகவைக்கவும். வேகும்போதே உளுந்து வாசனை கமகமக்கும்.
புட்டு நன்கு வெந்தவுடன் பாத்திரத்தில் கொட்டி நன்கு உதிர்த்துவிட்டு, அதில் துருவிய தேங்காய், நெய், நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
சூடாகச் சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். இருமல், சளி இருப்பவர்கள், மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிடலாம். மிகவும் நல்லது.
பலன்கள்
உளுந்தில் தேவையான கால்சியம், புரதம் இருக்கின்றன. தோலுடன் சேர்ப்பதால், நார்ச்சத்தும் கிடைக்கும்.
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்பு உறுதிக்கும் மிகவும் நல்லது. பெண் களுக்கு, கர்ப்பப்பை பலமாகும். இடுப்பு வலி வராமல் இருக்கும். ஆண்களுக்கு உடல் பலம் பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here