கோவில்களுக்கு என்னவெல்லாம் செய்வதன் மூலம் நாம் புண்ணியம் பெறலாம்

0
303
தெய்வத்திருப்பணிக்காக‌ எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அது நம்முடைய புண்ணிய கணக்கில் வரவாகும். ஒருவர் தெய்வ திருப்பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டுமானால், அவரது ஜாதகத்தில் கேது பலம் பெற்றிருக்க வேண்டும்.
ஆலயத்தில் நடைபெறும் குடமுழுக்கு விழாக்களை முன்நின்று நடத்தினால் ஆச்சரியப்படத்தக்க வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. முன்பெல்லாம் நாயன்மார்கள் உழவாரப் பணி செய்து கோவிலை சுத்தப்படுத்தி, பக்தர்களுக்கு நன்மைகளை வழங்கினார்கள்.
ஒவ்வொருவரும் நம்முடைய வீட்டை சுத்தமாக வைத்திருக்க முயல்கிறோம். அதேபோல், நமக்கு அருளை வழங்கும் ஆண்டவனின் ஆலயத்தை தூய்மையாக வைத்திருந்தால் ஆண்டவனின் அருளுக்குப் பாத்திரமாக விளங்கலாம்.
கோவில் கொடுக்கும் விபூதி, குங்குமங்களை பலரும் நெற்றியில் இட்டுக் கொண்ட பிறகு மீதம் இருப்பதை கோவில் தூண்களில் கொட்டி வைக்கிறார்கள். எனவே, சிறிய விபூதி மடல்களை கோவில் தூண்களில் கட்டி வைக்காலாம்.
சில கோவில்களில் நந்திக்கு அபிஷேகம் செய்யும் அபிஷேக தண்ணீர் பக்தர்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் பெருகி வந்துவிடும். அதற்கு வடிகால் அமைத்து அந்த அபிஷேக தீர்த்தத்தை பலரும் தெளித்துக் கொள்ளும் விதம் செய்தால், புண்ணியம் கிடைக்கும்.
அதுபோன்றே பிரசாதம் வழங்குவதற்கு தொன்னை செய்து கொடுக்கலாம். விபூதி, குங்குமங்களை மடித்துச் செல்ல காகிதங்களை வழங்கலாம். ஆலயங்களில் உள்ள விளக்கிற்கு எண்ணை, நெய், திரி போன்றவற்றை கொடுக்கலாம். மின் விளக்குகள் வாங்கி கொடுத்தால், நம் வாழ்வில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடைபெறும். பிரகாசமான எதிர்காலம் உருவாகும்.