விளையாடி முடித்த பிறகு என்ன சாப்பிடலாம்?

0
255
விளையாடி முடித்த பிறகு தசைகள் எல்லாம் சக்தியை இழப்பதோடு மட்டுமல்லாமல் வியர்வை வழியாக தாது உப்புக்களும் வெளியேறி விடுகின்றன.
அதனால் தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.
புதிய பழச்சாறு (Fresh Fruit Juice), உலர் பழங்கள், மில்க் ஷேக் வகைகள், ஸ்வீட் லஸ்ஸி, பிரெட் ஜாம், ஃப்ரூட் பன், ஃப்ளேவர்டு மில்க், வாழைப்பழம் ஆகியவை, விளையாடி முடித்து வந்ததும் சாப்பிடலாம்.
வெப்பமான காலநிலையில், வியர்வை அதிகமாக வெளியேறும்போது, உப்பு சேர்த்த உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும்.
மீன், சிக்கன், மட்டன் மாதிரி அசைவ உணவுகள், அப்பளம், ஊறுகாய், வீட்டில் தயாரித்த பொடிகள் போன்றவற்றில் உப்பு உபரியாக இருக்கும்.
உப்பு, சர்க்கரை சேர்த்த எலுமிச்சம்பழச் சாறு, இளநீர் மாதிரி எடுத்துகொண்டால், எலெக்ட்ரோலைட்களைத்(Electrolytes) தக்கவைக்கும்.hhk
விளையாடும் விளையாட்டைப் பொறுத்து, கலோரி தேவை மற்றவர்களை விட 4 முதல் 5 மடங்கு வரை மாறுபடும்.
உப்பு போடாத பாப்கார்ன், காய்கறி சாலட், சோயா, சுண்டல் வகைகள், எனர்ஜி பார்ஸ், பயறு வகைகள், பால் பொருட்கள், விளையாட்டு வீரர்களுக்கான பிஸ்கெட் போன்றவற்றை விளையாட்டுக்கு முன் சாப்பிடலாம். நொறுக்குத்தீனிகளைத் தவிர்ப்பதும் முக்கியம். விளையாட்டு வீரர்களுக்கு அசைவ உணவுதான் அவசியம் என்றில்லை.
அசைவ உணவில் கிடைக்கும் அதே அளவு ஊட்டச்சத்தை சைவ உணவிலும் பெற முடியும்.
உடற்பயிற்சிக்கு 2 மணி நேரம் முன்னதாக முழுமையான உணவு எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சிக்கு சிறிது நேரத்துக்கு முன் விளையாட்டு பானங்கள், மாவுச்சத்து நிறைந்த பானங்கள் சாப்பிடலாம்.
உடற்பயிற்சி முடித்த 5 முதல் 10 நிமிடங்களுக்கு பிறகு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். உடனடி ஆற்றல் தேவைப்படுகிறவர்கள் அந்த ஆற்றலை கொடுக்கக் கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.
மெதுவாக வெளிப்படக்கூடிய ஆற்றல் (Slow relase energy) தேவைப்படுபவர்கள் அத்தகைய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here