16 ஏப்., 2018

உஸ்ட்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?


நோய்களுக்கு இடங்கொடுக்காமல் உடலைப் பாதுகாக்கும் ஆசனம் உஸ்ட்ராசனம் ஆகும். உடம்பை மிகவும் ஆரோக்கியமாக வைக்கும்.

உஸ்ட்ராசனம் செய்முறை

தரைவிரிப்பில் நேராக நின்று கொண்டு மெதுவாக இரு மூட்டுக்களையும் தரைவிரிப்பில் ஊன்றி இருகால்களையும் பின்புறமாக நீட்டவும். பின் வயிறு, மார்பு, தலை ஆகியவைகளை பின்புறம் வளைத்து இரு கைகளாலும் இரு கணுக்கால்களையும் பிடிக்க வேண்டும். இதுவே உஸ்ட்ராசனம் ஆகும். பின் இயல்பு நிலைக்குத் திரும்பவும். இரண்டு மூன்று முறை செய்யலாம்.

உஸ்ட்ராசனம் பலன்கள்

  • முதுகெலும்பை வலுப்படுத்தும்
  • முதுகுவலி, இடுப்பு வலி அனைத்தும் போக்கும்.
  • தொந்தி குறையும்
  • மார்பு விரிவடையும்
  • கால்கள், கைகள், புஜங்கள் பலம் பெறும்
  • எவ்வித நோயும் உடலை அண்டாது.