18 ஏப்., 2018

ஆசிபா கொலை குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது - விஜய் சேதுபதிகாஷ்மீர் சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். 

ஸ்டன்ட் யூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை பார்த்தால் ஆத்திரம் வருகிறது இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது என அவர் தெரிவித்தார்.