சுவையான இங்கிலீஷ் ஸ்கோன் செய்வது எப்படி?

0
191
நம்மூரில் பணியாரம் என்றால் இங்கிலாந்திலோ அது இங்கிலீஷ் ஸ்கோன். தோற்றத்தில் வட்டவடிவ வெஜ் பப்ஸ் போலஇருக்கும்.
 
தேவையானபொருட்கள்
மைதா மாவு – 390 கிராம்
வெண்ணை– 90 கிராம்
பொடித்தசர்க்கரை – 75 கிராம்
முட்டைஒன்று
பேக்கிங்பவுடர் – 10 கிராம்
பால், க்ரீம், ரேய்சின்ஸ் – 100 கிராம்
 
செய்முறை
 
அகலமானபவுலில் வெண்ணையை போட்டு க்ரீம் பதம் வரும் வரை நன்றாக அடித்துக் கொள்ளவும். 
 
பின்னர் முட்டையை உடைத்து ஊற்றி கலந்து மைதா மாவு, பேக்கிங் பவுடர் பொடித்த சர்க்கரை, ரேய்சின்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் சிறிதளவு பால், க்ரீம் சேர்த்து நன்றாக பிசைந்து 15 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
 
பிறகு அதை எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி ரோல் செய்யவும். பின்னர் அவற்றை வெண்ணெய் தடவிய பேக்கிங் டிரேயில் வைத்து அதன் மேல் முட்டை கோட்டிங் கொடுத்து பேக்கிங் அவனில் 190 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பத்து நிமிடம் வைத்து எடுத்து பரிமாறவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here