நொய் உப்புமா செய்வது எப்படி?

0
550
தேவையான பொருள்:
பச்சரிசி 1 கப்
துவரம் பருப்பு 2 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் 4
உப்பு,எண்ணெய் தேவைக்கு
கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு தாளிக்க
பால் 2டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் 4 டீஸ்பூன்

 

செய்முறை:
பச்சரிசியுடன் மிளகு சேர்த்து மிக்சியில் நொய் போல உடைக்கவும், துவரம்பருப்பை ஊற வைத்து நீரை வடிய விட்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய விட்டு கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு தாளித்து 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்கும்போது அரிசி நொய், அரைத்த பருப்பு விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின்பு தேங்காய்த்துருவல், பால் விட்டு கிளறி உப்புமா உதிரி உதிரியாக வந்த பின்பு இறக்கவும்.
இறக்கிய பிறகு எலுமிச்சை சாறு பிழிந்தும் பறிமாறலாம்