17 ஏப்., 2018

சேமியா பிரியாணி செய்வது எப்படி


தேவையானவை:
மட்டன்50 கிராம்
சேமியாஅரை கிலோ
எண்ணெய்கால் கப்
நெய்அரை கப்
இஞ்சி&பூண்டு விழுது2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள்அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள்1 டீஸ்பூன்
தயிர்2 டீஸ்பூன்
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய்3
கொத்தமல்லி, புதினாஅரை கட்டு
தேங்காய்ப்பால்1 கப்
எலுமிச்சம்பழம்அரை பழம்
உப்புதேவையான அளவு

செய்முறை:
மட்டனை நன்றாக கழுவிக்கொள்ளவும், அதில் பாதியளவு தயிர், பாதியளவு மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து 1மணிநேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சேமியாவைப் போட்டு பொன்னிறமாக வருக்கவும், பிரஷர் பேனில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
இதனுடன் இஞ்சி&பூண்டு விழுது, கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். மீதமுள்ள மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின்னர் ஊறவைத்த மட்டன் கலவை சேர்த்து 3விசில் வரும் வரை வேகவிடவும். பின்னர் மூடியைத் திறந்து, வறுத்த சேமியா சேர்த்து அடுப்பை 20 நிமிடம் சிம்மில் வைத்திருந்து அணைக்கவும்.