7 ஏப்., 2018

சுமாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

அனைத்திற்கும் மனமே காரணம், அந்த மனதை ஒரே நிலையில் இருக்க உதவும் ஆசனம் சுமாசனம். 

சுமாசனம் செய்முறை

தரைவிரிப்பில் அமர்ந்து வலது காலை இடது தொடை மீதும், இடது காலை வலது தொடை மீதும் வைக்க வேண்டும். 

இரு குதிங்கால்களும் அடிவயிற்றைத் தொடும்படி இருக்க வேண்டும். இருகைகளையும் மடக்கி ஒன்றின்மேல் ஒன்றாக சுண்டுவிரல் அடிவயிற்றில் படும்படியாக நடுவில் வைக்க வேண்டும். 

இடை, முதுகு, தலை, பார்வை நேராக இருக்க வேண்டும். சுவாசம் சீராக இருக்க வேண்டும், இதுவே சுமாசனம் ஆகும்.

சுமாசனத்தின் பயன்கள்
  • மனம் ஒருநிலைப்படும்
  • மார்பு விரிவடையும்
  • முதுகெலும்பு பலப்படும்
  • நுரையீரல் செம்மைப்படும்
  • சகல நாடிகளும் நன்கு வலுப்படும்