திரிகோணாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

0
520
உயரம் தாண்டுவோர், நீளம் தாண்டுவோர் தங்கள் வெற்றிக்கு இந்த ஆசனத்தை நம்பலாம். ஆசனநிலை பார்ப்பதற்கு முக்ககோணம் போன்று தோற்றம் தருவதால் திரிகோணாசனம் என்ப்படும்.
திரிகோணாசனம் செய்முறை
தரைவிரிப்பில் கால்களை அகலமாக வைத்து ஊன்றி, பக்கவாட்டில் நீட்டி, சுவாசத்தை உள்ளிழுத்து வைத்துக் கொண்டு பின் மெதுவாக சுவாசத்தை வெளிவிட்டவாறே குனிந்து வலது கையால் இடது காலைத் தொடவும்.
இப்பொழுது, இடது கைவானேக்கி உயர்ந்து இருக்க வேண்டும். இது தான் திரிகோணாசனம் நிலையாகும்.  பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பி இடது கையால் வலது காலைத் தொடவும்.
இப்போது, வலது கை வானோக்கி உயர்ந்து இருக்க வேண்டும். இம்மாதிரி மாற்றி மாற்றி கைகளால் கால்களைத் தொட வேண்டும். இம்மாதிரி இரு பக்கமும் மூன்று மூன்று முறை மாறி மாறிச் செய்ய வேண்டும்.
திரிகோணாசனத்தின் பலன்கள்
  • முதுகெலும்பு, இடுப்புத் தாது நரம்புகளைச் செம்மையுற செய்யும்
  • நாள் முழுவதும் உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடன் இருக்க செய்யும்
  • இடுப்பு பிடிப்பு, வயிற்று வலி போன்ற வியாதிகளை போக்கும்
  • கால்களும், கைகளும் வலுப்பெறும்
  • உயரம் மற்றும் நீளம் தாண்டுவோருக்கு இது துனைப்புரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here