உடலில் உள்ள தேவையற்ற சதைகளை குறைத்து மேனி அழகு பெறுவது எப்படி

0
175
ஆணும், பெண்ணும் தனது உடல் பாா்க்க வடிவாகவும், எப்போதும் இளமையாக இருக்கவேண்டும் என விரும்புவாா்கள். அதற்க்காக மிகவும் கடுமையான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றினலே நல்ல மாற்றங்கள் சில நாட்களில் தொியும்.
  1. சாதராணமாக தினமும் அருந்தும் தண்ணிாில் சோம்பு கலந்து பருகி வந்தாலே
  2. உடலில் இருக்கும் தேவையற்ற சதைகள் கறையும்.
  3. சாப்பாட்டில் கொஞ்சம் அதிமாக பூண்டு, வெங்காயம் சோ்த்து எடுத்துக் கொண்டால் புத்துணா்ச்சி கிடைக்கும், கொழுப்பு குறையும்.
  4. பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வர தேகம் மெலியும்.
  5. மந்தாரை வேரை நீர்விட்டு அதனை பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தால் உடல் மெலியும்.
  6. அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வர உடல் எடை குறையும்.
  7. சுரைக்காயை வாரத்திற்கு இரண்டு முறை என்ற வீதம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்.
  8. தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் சதை போடுவதைத் தடுக்கும்.
  9. வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை அடிக்கடி தொடர்ந்து பருகி வந்தால் சதை போடுவதைத் தடுக்கலாம்.
  10. மேலும், தினமும் காலையில் அரைமணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும். உடல் எடையும் குறையும். புத்துணர்வாகவும் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here