தல அஜித் பற்றிய சில உண்மைகள்

0
722
Ajith Kumar Photography

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நடிகர் அஜித்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை செல்லமாக தல என்றும் அழைப்பார்கள். திரைத்துறையில் ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டவர் அஜித். யாருடைய பின்பலமும் இல்லாமல் தமிழ் சினிமா துறைக்கு வந்த ஒரு நடிகர்.

அஜித் பைக் ஓட்டுவதில் சிறந்தவர். பைக் ரேஸில் சேர பணத்துக்காக திரைத்துறையை தேடி வந்தவர். பல அவமானங்களுக்கு பிறகு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார்.பிறகு கிடைத்த பணத்தை வைத்து ரேஸில் சேர்ந்தார்.

ஆரம்பத்தில் இவருக்கு வசன உச்சரிப்பு யாருக்கும் பிடிக்கவில்லை. இவருக்கு வசனமே வராது என பலர் நக்கல் அடித்தனர். அதன் பிறகு வெளிவந்த வாலி படம் மூலம் என் கண்களும் வசனம் பேசும் என்று சொல்லாமல் கூறி அந்த நடிப்பிற்கான விருதைப் பெற்றார் அஜித்.

ஆரம்பம் திரைப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தின் காரணமாக முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது. இதனால், முழங்கால், மற்றும் தோள் பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் உயிருக்கு ஆபத்தான சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பவர் அஜித்.

1999 ஆம் ஆண்டில் வெளிவந்த அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த நடிகை சாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2012 ஆம் ஆண்டின் புகழ் பெற்ற மனிதர்களில் அஜித் குமார் 61வது இடத்தினைப் பெற்றார். 2014 ம் ஆண்டில் 51 வது இடத்தை பிடித்தார். இதுவரை மூன்று பிலிம்பேர் விருதுகளும் மூன்று விஜய் விருதுகளும் வாங்கியுள்ளார்.

ஒரு கல்லூரி விழாவில் மாணவர்கள் இயக்குனர் கௌதம் மேனனை பார்த்து எங்க “தலய” வைத்து எப்போது படம் எடுப்பீர்கள்? என்று கேட்ட போது “தல” அப்படினா யாரு? என்று கேட்டார்.அதன் பிறகு கௌதம் எடுத்த படங்கள் தோல்வி அடைந்த பிறகு அவரை அழைத்து வாய்ப்பு கொடுத்தவர் அஜித். அந்த படம்தான் என்னை அறிந்தால்.

அஜித் தவற விட்ட வெற்றிப்படங்கள் லவ் டுடே, காக்க காக்க, ரன், கோ, சாமி, நந்தா, ஜெமினி, ஜீன்ஸ் இந்தப்படங்கள் எல்லாமே அஜித்திடம் சொல்லி வேற நடிகர்கள் நடித்த படங்கள்.

மக்களை மதிக்க தெரிந்த ஒரு நடிகர். இவர் பல உதவிகளை செய்துவருகிறார்.மேலும் சினிமா துறையில் சாதனை படைக்க வேண்டும் என அனைவரின் சார்பாக வாழ்த்துக்களையும் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here