1 மே, 2018

சர்ச்சையில் ட்விட்டர் ..! பேஸ்புக் நிறுவனம் போலவே வாடிக்கையாளர் விபரங்களை விற்றதா?


ஃபேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனமும் மக்களின் இரகசிய தகவல்களை திருடி விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திற்கு 50 மில்லியன் பேஸ்புக் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருக்கும் இரகசிய தகவல்களை முறையின்றி சோதனை செய்து, திருடியது சர்ச்சையை உருவாக்கியது.

அதேபோல், டிவிட்டரும் தமது நிறுவன வாடிக்கையாளர்களின் விபரங்களை முறைகேடாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு விற்றதாக அனலிட்டிகா அதிகாரி அலெக்சாண்டர் கோகன் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்திற்கு தகவல்கள் விற்கப்பட்டதை டிவிட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டு இருக்கிறது.

மேலும், இது குறித்து டிவிட்டா் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் 
விளம்பரம் தொடர்பான பணிகளுக்காக சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு சில விபரங்களை பகிர்ந்து கொண்டதாகவும், தனிப்பட்ட உரிமை தொடர்பான விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று விளக்கமளித்துள்ளது.

அத்துடன், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தை விளம்பரதாரர் பட்டியலில் இருந்து ட்விட்டர் நீக்கியுள்ளது.