கொய்யாப்பழத்தின் அறியப்படாத தகவல்கள்

0
213

மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த கொய்யாப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகளுக்கு கொய்யாப்பழம் நல்ல மருந்தாக பயன்படுகிறது.

கொய்யா இலையை உலரவைத்து பொடியாக்கி பல் துலக்கினால் பற்கள் நன்கு சுத்தம் ஆவதோடு, வாய்துர்நாற்றம் நீக்குகிறது. மேலும் ஈறுகளில் உள்ள வலி, வீக்கத்தை குணப்படுத்துகிறது.

கொட்டை இருக்கும் சிவப்பு கொய்யாப்பழத்தை நறுக்கி வெயிலில் காயவைத்து பொடியாக்கிக் கொள்ளவேண்டும். பிறகு கொய்யாமரத்தின்  இலை சாறுடன் அந்த பொடியை கலந்து தலையில் தடவி வந்தால் முடி பளபளப்பாக கருமையாக  வளரும்.

கொய்யாப்பழத்தை அரைத்து முகத்தில் பூச வேண்டும். காய்ந்த பிறகு நீரில் கழுவி வந்தால் சில மாதங்களில்  உங்களுக்கு சிவப்பழகு கிடைக்கும்.

கொய்யா இலையை பேஸ்ட் போல் அரைத்து முகப்பரு உள்ள இடத்தில தடவினால் பாரு இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.