பயனுள்ள சமையல் டிப்ஸ்

0
305
 
 
பூரி அல்லது சப்பாத்தி செய்யும்போது கோதுமை மாவுடன் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

 

காய்ந்த மிளகாயை வறுக்கும்போது  சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

 

வெங்காய பக்கோடாவிற்கு மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசைந்து செய்தால் பக்கோடா மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.

 

சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்க அதை எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைக்க வேண்டும்.

 

சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறினால், பொங்கல் இன்னும் சுவையாக இருக்கும்.

 

கறிவேப்பிலைச் செடிக்கு புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றினால் நன்கு வளரும்.