மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா?

0
212

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 84 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு முதல் பல்வேறு வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணங்களுக்கு இதுவரை 1,484 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த பயணங்களுக்கு மோடி அவர்கள் பயன்படுத்தும் விமானத்தை பராமரிக்க 1,088 கோடியும், தனியார் விமான பயன்பாட்டுக்கு 387 கோடியும், வெளிநாட்டு பயணத்தின்போது மோடியின்  தொலைபேசி அழைப்புகளுக்கு 9.12 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக மக்களவையில் வெளியுறத்துறை இணை அமைச்சர்  வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.