in

ஆண்மை குறைவை சரி செய்யும் ஜாதிக்காய்

ஜாதிக்காயை மிதமான சூட்டில் நெய்யில் வறுத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை மற்றும் மாலையில் பசும் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் ஆண்மை குறைவு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

நீர்த்துப் போன விந்து கெட்டியாகும். விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஜாதிக்காயை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் நாளடைவில் மறையும். மேலும் முகம் பொலிவாக காணப்படும்.

தேமல், படை போன்ற தோல் வியாதிகளுக்கு ஜாதிக்காய் பயன்படுத்தப்படுகிறது. அம்மை நோயின் போது ஜாதிக்காயுடன் சீரகம், சுக்கு பொடி செய்து, உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால், அம்மை நோயின் போது ஏற்பட்ட கொப்புளங்கள் மறையும்.

குறிப்பு : ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கவும் ஆண்மை அதிகரிக்க மிக எளிமையான வழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *