நிம்மதியான தூக்கம் வருவதற்கு சில டிப்ஸ்

0
909

நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தூக்கமின்மை. சிலர் படுத்தவுடன் தூங்கி விடுவார்கள். சிலர் என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு தூக்கம் எளிதில் வருவதில்லை.

இரவில் நன்றாக தூங்கினால்தான் மறுநாள் காலையில் நம்மால் சுறுசுறுப்பாக இருக்க முடியும். மனித வாழ்க்கையில் தூக்கம் மிக முக்கியம்.

நிம்மதியான தூக்கம் வருவதற்கு நாம் சில பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டால் போதும். தூக்கம் நன்றாக வரும்.

முதலில் தூக்க மாத்திரை சாப்பிடும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இரவு நேரங்களில் புரோட்டா, பிரியாணி, சிக்கன் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது செரிமானம் ஆகும் போது சிலருக்கு தூக்கத்தை கெடுக்கும்.

இட்லி, சப்பாத்தி, தோசை போன்ற உணவுகளை சாப்பிட்டால் எளிதில் செரிமானம் ஆகும்.

நமது உடலில் வெப்பம் அதிகமாக இருந்தால் தூக்கத்தை கெடுக்கும். ஆகையால் வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

நீங்கள் உறங்கும் இடம் நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும்.

கொசுத் தொல்லை இருந்தால் கொசுவலை பயன்படுத்துங்கள்.

தூங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்பே டிவி, கம்ப்யூட்டர், மொபைல் பார்ப்பதை தவிர்க்கவும்.

நீங்கள் தூங்கும் போது உங்கள் அருகே செல்போன் வைக்க வேண்டாம்.

இரவு உணவு சாப்பிடுவதற்கு முன்பு குளித்துவிட்டு சாப்பிடுங்கள். இதனால் தூக்கம் நன்றாக வரும்.

உடல் உழைப்பு இல்லையென்றால் தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படும். ஆகவே இரவில் சாப்பிட்டவுடன் தூங்க செல்லாமல் சிறிது நேரம் நடை பயிற்சி செய்து விட்டு பிறகு தூங்க செல்லுங்கள். தூக்கம் அருமையாக வரும்.

தியானம், யோகா, உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உடலும் மனதும் நல்ல ஆரோக்கியமாக இருப்பதுடன் தூக்கமும் நன்றாக வரும்.

இதை சரியாக செய்தாலே போதும். நிம்மதியான தூக்கம் நிச்சயம் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here