தொண்டர்கள் அமைதி காக்குமாறு ஸ்டாலின் வேண்டுகோள்

0
190

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட சூழலில் ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

இதனையடுத்து மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக தற்போது கருணாநிதி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக கூறப்படுகிறது.

அசம்பாவிதங்களுக்கு இடம் கொடுத்து விடாமலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் காவல்துறையினருக்கு திமுக தொண்டர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.