ஸ்டேஷன் மாஸ்டர் உறங்கியதால் பரபரப்பு

0
255


உத்தர பிரதேச மாநிலம்  பிஜ்னொர் மாவட்டத்தில் உள்ள முர்ஸத்பூர் ரயில்வே நிலையத்தின் தீப் சிங் என்ற  ஸ்டேஷன் மாஸ்டர் உறங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதனால் அந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் தடைப்பட்டன.எதற்காக ரயில்கள் நிற்கின்றன என்ற காரணம் தெரியாமல் பயணிகளும் ரயில்வே ஊழியர்களும் குழப்பம் அடைந்தனர்.


மது அருந்தி மயக்க நிலையில் உறங்கியதாக கூறுகிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.


தீப் சிங்கிடம் விசாரித்த போது எனக்கு இருமல் அதிகமாக இருந்ததால் இருமல் சிரப்பை அதிகமாக அருந்திவிட்டேன். இதன் காரணமாக உறங்கிவிட்டேன். மது அருந்தவில்லை என்று கூறினார்.


பணி நேரத்தில் உறங்கியதால் அவர் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக ரயில்வே நிலையத்தின் கண்காணிப்பாளர் சுக்லா தெரிவித்தார்.