தினை ஆப்பம் செய்யும் முறை

0
6

தேவையான பொருட்கள்
தினை – 2 கப் இட்லி அரிசி – 1/4 கப் வெள்ளை உளுந்து – 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் – 1 ஸ்பூன் தேங்காய்ப் பூ – அரை கப் வடித்த சாதம் – ஒரு கைப்பிடி உப்பு – தேவைக்கு சர்க்கரை – 2 ஸ்பூன் தனியாக ஊறவைத்த பச்சரிசி – 2 ஸ்பூன் செய்முறை: தினையுடன் உளுந்து, வெந்தயம், இட்லி அரிசி சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதில் தேங்காய் மற்றும் வடித்த சாதத்தை சேர்த்து நைசாக அரைக்கவும். ஊற வைத்த பச்சரிசியை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். மாவு சூடேறியதும் அடுப்பிலிருந்து எடுத்து விடவும். சூடு தணிந்த பிறகு அரைத்து வைத்துள்ள ஆப்ப மாவுடன் கலந்து உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலக்கி மாவை புளிக்க விடவும். மறுநாள் மாவு நன்கு புளித்த பிறகு அந்த மாவுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலக்கவும். பிறகு அடுப்பில் ஆப்பச்சட்டியை வைத்து நன்கு சூடேறியதும் மாவை ஊற்றி மூடி வைத்து வேக விட்டு எடுக்கவும். சுவையான சத்தான தினை ஆப்பம் தயார். குறிப்பு : இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here