புற்றுநோயை குணப்படுத்தும் தேயிலை

0
321

இந்தியா மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தேயிலையை அடிப்படையாகக் கொண்டு புதிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு வந்தனர்.

இதில் புற்றுநோய் அச்சத்தில் இருந்து  சற்று நிம்மதிப் பெருமூச்சு கிடைத்துள்ளது.

தேயிலையில் நானோ துகள்கள் மற்றும் சில வேதிப் பொருட்கள் உள்ளன.இதில் குவாண்டம் துகள்களை உருவாக்கி அதன் மூலம் நுரையீரல் புற்றுநோய் செல்களை 80% அளவுக்கு அழிக்க முடியும் என்று ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வுக்குத் தலைமை வகித்த ஸ்வான்சி பல்கலைக்கழக விஞ்ஞானி சுதாகர் பிச்சைமுத்து கூறியதாவது:  தேயிலையில் உள்ள இயற்கையான நானோ துகள்களில் சில வேதிப்பொருட்களைச் சேர்த்து இயற்கையான முறையில் குவாண்டம்  துகள்களை உருவாக்க முடியும் என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல இதன் செலவும் மிகக் குறைவு என்கிறார்.