பூஜை அறையில் இந்த பொருட்களை வைக்கக்கூடாது

0
389

பூஜை அறையில் வைக்கப்படும் வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். அதோடு வெற்றிலையில் சுண்ணாம்பு வைக்கக்கூடாது. பச்சரிசி சாதம் செய்து கடவுளுக்கு படைக்க வேண்டும். அதோடு அவல், பொரிகடலை, கற்கண்டு ஆகிய பொருட்களை வைத்து படைக்கலாம்.

நாகப்பழம், புளியம் பழம், மாதுளை, கொய்யா பழம், வாழைப்பழம், நெல்லி, இலந்தை மாம்பழம் ஆகியவையும் வைத்தும் பூஜை செய்யலாம். தேங்காயை உடைக்கும்போது அதை சமமாக உடைத்து குடுமியை தனியாக பிரித்து எடுத்து  விட வேண்டும்.

அழுகிய தேங்காய், வழுக்கை மற்றும் கோணலான தேங்காயை உடைக்கக்கூடாது. கடவுள் முகத்திற்கு முன் சாம்பிராணி புகை கண்டிப்பாக போடவேண்டும். இதனால் வீட்டில் உள்ள தீய சக்திகள் நீங்கும்.

கடவுள் பூஜைக்கு அருகம்புல், மல்லி, சாமந்தி, ரோஜா, பன்னீர் பூ, மரிக்கொழுந்து, மல்லிகை பூ ஆகிய மலர்களை கொண்டு பூஜை செய்யலாம்.

பூவின் இதழ்கள் பூச்சி கடித்த அல்லது காய்ந்துபோன பூக்களை பூஜைக்கு பயன்படுத்தவே கூடாது.