கோலமாவு கோகிலா திரை விமர்சனம்

0
403

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் “கோலமாவு கோகிலா” இப்படத்தில் நயன்தாரா, சரண்யா,யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நயன்தாரா சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக வருகிறார். 

நயன்தாராவின் அம்மா சரண்யாவுக்கு புற்றுநோய் வருகிறது. அதை குணப்படுத்த பணம் தேவைப்படுவதால் எதிர்பாராத விதமாக போதைப்பொருள் கும்பலிடம் சிக்குகிறார்.

இதில் நயன்தாரா அப்பாவியாக இருப்பதால், அதனை பயன்படுத்தி  அந்தப்  போதைப்பொருள் கும்பலும் நயன்தாராவை வைத்து, பொருட்களைக் கடத்துகிறார்கள்.

அதிலிருந்து தப்பித்து அந்த கும்பலை எப்படி பிடிக்கிறார், தனது அம்மாவை காப்பாற்றினாரா என்பதுதான் படத்தின் கதை.

இப்படத்தில் நயன்தாரா மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இடைவேளைக்கு முன்பு படம் விறுவிறுப்பாக செல்கிறது. அதன் பிறகு திரைக்கதை மெதுவாக நகர்கிறது.

நயன்தாரா, யோகிபாபு,மொட்டை ராஜேந்திரன் சில காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறார்கள்.

சிவகுமாரின் ஒளிப்பதிவும் அனிருத் இசையும் ரசிக்க வைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here