‘விஸ்வாசம்’ ட்விட்டரில் தெறிக்க விட்ட தல ரசிகர்கள்

0
250

அஜித் – சிவா கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது உருவாகிவரும் படம் ’விஸ்வாசம்

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
டி .இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய தாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அதிகாலை 3.40 மணியளவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

பர்ஸ்ட் லுக் வெளியான சிறிது நேரத்திலேயே ட்விட்டரில்  விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் என்ற ஹேஷ் டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கிவிட்டார்கள்.

இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.