விஸ்வரூபம் 2 திரை விமர்சனம்

0
225

கடந்த 2013-ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் விஸ்வரூபம் வெளியானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது விஸ்வரூபம் 2 வெளியாகியுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளனர்.

விஸ்வரூபம் முதல் பாகத்தில் எழும் கேள்விகளுக்கு இரண்டாம் பாகத்தில் பதில் கூறப்பட்டுள்ளது.

கமல்ஹாசன், சேகர் கபூர், பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகியோர் உமர் என்ற தீவிரவாதியை தேடி வருகின்றனர். இந்த நிலையில் லண்டன் கடலுக்கு அடியில்  செயற்கை முறையில் பூகம்பம் மற்றும் சுனாமி உருவாக்கி லண்டனை அழிக்க உமர் திட்டமிடுகிறார். இதனை “ரா” உளவாளிகள் எப்படி தடுக்கிறார்கள், அதன்பின் என்ன ஆகின்றது என்பதுதான் விஸ்வரூபம் 2 படத்தின் கதை.

இந்த படத்தில் கமல் சின்ன சின்ன வசனங்களில் பெரிய பெரிய விஷயங்களை கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் நீளமான அம்மா செண்டிமெண்ட் காட்சி உள்ளது.

பூஜாகுமாருக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை.  ஆண்ட்ரியாவுக்கு சிறப்பாக நடித்துள்ளார்.  படத்தில் நடித்த அனைவரும் தங்களது கதாப்பாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர்.

ஜிப்ரானின் இசையில் படத்தின் மூன்று பாடல்களும் அருமை. ஹாலிவுட் படத்துக்கு இணையாக பின்னணி இசை தந்திருக்கிறார் ஜிப்ரான்.

கமல்ஹாசனின் கூர்மையான திரைக்கதையும் வசனங்களும் படத்தின் மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில் ‘விஸ்வரூபம் 2’ஹாலிவுட் தரத்தில் வெளிவந்துள்ள ஒரு தமிழ் படம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here