11 ஆக., 2018

அரிசி சாதம் கவனம் தேவை


ஒரு முறை சமைத்த அரிசி சோற்றை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது நல்லது என்றும், பழைய சாதம் கேட்டது என்றும் நினைக்கிறார்கள். சாதத்தை சமைத்தவுடன் எடுத்துக்கொள்ளவும்.

சமைக்காத அரிசி தான் பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் சமைத்த அரிசி சாதத்தை ஃப்ரிட்ஜில் வைக்காமல் அறைவெப்பநிலையில் வெளியிலேயே வைத்திருக்கும் போது அதில் அதிக அளவில் பாக்டீரியாக்கள் வளரும்.

இதனை மீண்டும் சூடுபடுத்தும் போது, அது ஆபத்தாகி விடும் அதனால் சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்து அப்படியே மீண்டும் எடுத்துக் கொள்வது நல்லது. அல்லது அந்தந்த வேலைக்கான சாதத்தை தேவையான அளவுக்கு சமைத்துக் கொள்வதே சிறந்தது.