வெங்காயத்தில் உள்ள மருத்துவ பலன்கள்

0
82
வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும் பித்த ஏப்பம் மறையும்.
சம அளவு வெங்காயச் சாறு வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி குறையும்.
வெங்காயச் சாறு கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட காது இரைச்சல் மறையும்.
வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து சிறிது கற்கண்டு தூளையும் இவற்றை பாலுடன் சேர்த்து சாப்பிட எல்லா விதமான மூலக் கோளாறுகளும் நீங்கும்.
வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும் வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
வெங்காயத்தை சுட்டு சிறிது மஞ்சள் சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
வெங்காயச் சாற்றையும் வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வந்தால் பல்வலி ஈறுவலி குறையும்.
வெங்காயப் வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும் மூலச்சூடு குறையும்.
வெங்காயத்தை அவித்து தேன் கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலம் பெறும்.
வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
வெங்காயச் சாற்றை படை தேமல் மேல் பூசிவர மறைந்துவிடும்.
திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும் குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
வெங்காயம் அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேக நோய் குறையும்.
வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து கொண்டது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் சாப்பிடலாம்.
பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும் பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது ஜீரணத்திற்கும் உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here