சிவலிங்கம் போல் காட்சி தரும் திருப்பரங்குன்றம் மலை

0
543

முருகனின் அறுபடைவீடுகளில் மலையை குடைந்து கட்டப்பட்ட ஆலயம் திருப்பரங்குன்றம்.

முருகன் ஆலயம் திருப்பரங்குன்ற மலையில் வடதிசையிலிருந்து தெற்கே பார்க்கும்போது கைலாய மலை போல் காட்சி தரும்.

தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பார்க்கும் போது சிவலிங்கம் போல காட்சி தரும்.

முருகப்பெருமான் சன்னதியின் வலப்புறம் பெருமாள் சன்னதி உள்ளது. அதன் எதிரே “சத்திய கிரீஸ்வரர்” என்னும் சிவ சன்னதி உள்ளது. இப்படி விஷ்ணுவும் சிவனும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பது இங்கு மட்டும்தான்.

முருகனின் அருகிலேயே கற்பக விநாயகர் மேல் கைகள் இரண்டிலும் கரும்பினை விரும்பி காட்சி தருகிறார் இது போன்று வேறு எந்த ஆலயத்திலும் இல்லை.