ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக

0
467

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணித்தார். அப்போது சோபியா என்ற மாணவி தமிழிசையை பார்த்து பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார். இதனால் ஆத்திரமடைந்த தமிழிசை அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பிறகு தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை அந்த பெண்ணின் மீது புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சோபியா என்ற மாணவி கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தை கண்டித்து பாஜகவுக்கு எதிராகவும், சோபியாவுக்கு ஆதரவாகவும் கருத்துகளையும், கண்டனத்தையும்  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது ட்விட்டரில் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற ஹேஷ்டேக்  இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.