முந்திரி பருப்பு சாப்பிடுவது நல்லதா கெட்டதா?

0
562

முந்திரிப் பருப்பு சுவையான உணவாக மட்டும் இல்லாமல் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது.

முந்திரிப் பருப்பை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படுத்தும். சரியான அளவில் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும்.

முந்திரிப் பருப்பில் குறைந்த அளவு கொழுப்பு இருப்பதால் இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள கொழுப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மாரடைப்பில் இருந்து பாதுகாக்கும்.

முந்திரியை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது அதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க முந்திரிப்பருப்பு உதவுகிறது.

வாரம் இருமுறை முந்திரிப் பருப்பு சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீராக இருப்பதோடு குறையவும் உதவி செய்கிறது.