சர்க்கார் படத்திற்கு மீண்டும் தடை – முடியலட சாமி ஏ.ஆர்.முருகதாஸ் மைண்ட் வாய்ஸ்

0
412

விஜய்  நடிக்கும் படத்திற்கு ஏதாதவது பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. அதேபோல், விரைவில் திரைக்கு வர இருக்கும் “சா்கார்” படத்திற்கு  தடை விதிக்கக் கோரி, குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் என்பவர், தயாரிப்பாளர் சங்கத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், விவசாயிகளின் பிரச்சனை மற்றும் தற்கொலையை மையபடுத்தி, தாம் இயக்கிய “தாகபூமி” () என்ற குறும்படத்தின் கதையினை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திருடி அதனை “கத்தி” எனும்  படத்தை இயக்கியதாக தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமான வழக்கு தஞ்சை குற்றவியல் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது, இதனால் தனது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக குறும்பட இயக்குநர்  அன்பு ராஜசேகர் வேதனை தெரிவித்துள்ளார்.

எனவே தமக்கு நியாயம் கிடைக்கும் வரை, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்திற்கு ரெட் கார்டு தடை விதிக்க கோரி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம், குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் மனு அளித்துள்ளதாக தொிவித்தார்.