பல்வேறு கீரை வகைகளும் அதன் முதன்மையான பயன்களும்


முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம் பெறும்.

வல்லாரைக் கீரை - மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான் கீரை - கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.

புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக் கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும். மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக் கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவளை - ஆண்மை தரும். சரும நோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக் கீரை - இருமலை போக்கும்.

சாணக் கீரை - காயம் ஆற்றும்.

வெள்ளைக் கீரை - தாய்ப்பாலை பெருக்கும்.

விழுதிக் கீரை - பசியைத் தூண்டும்.

கொடிகாசினி கீரை - பித்தம் தணிக்கும்.

துயிளிக் கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக் கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக் கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்குதட்டை கீரை - சளியை அகற்றும்.

நருதாளி கீரை - ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.
Blogger இயக்குவது.