in

திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் வாழ்க்கை வரலாறு

திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 98.

க.அன்பழகன் (டிசம்பர் 19, 1922) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார்.

இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார். அன்பழகன் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு டிசம்பர் 19, 1922 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவர் இயற்பெயர் இராமையா. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைமானித் தமிழ் பட்டப் படிப்பை 1944 முதல் 1946 வரை பயின்றார். பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1967 பணியாற்றியவர்.

இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பங்கு பெற்றவர். 1971இல் சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 1984 இல் இலங்கை வாழ் மக்களின் தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தவர்களில் இவரும் ஒருவர். திமுக வின் மூத்த மேடைப்  பேச்சாளரும் பெரியார் அடியொற்றி நடப்பவரும் ஆவார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் நின்று தோல்வியுற்றார். ”தமிழர் இனம்” குறித்தும் அவர்கள் வாழ்கின்ற நிலை குறித்தும், சுயமரியாதை குறித்தும் தன் பேச்சுக்களில் அதிகம் குறிப்பிட்டு வலியுறுத்தி வந்ததால் இனமானப் பேராசிரியர் என்று அன்புடன் அவர் கட்சித் தொண்டர்களாலும், மக்களாலும் அழைக்கப்படுகின்றார்.

திமுக கட்சியின் பொதுச்செயலாளராக நீண்டகாலமாக கட்சி பணியாற்றிவருபவர். திமுகவின் தலைவர் மு. கருணாநிதியுடன் அதிக நெருக்கமானவர். எழுத்தாளராகப் பல தமிழ் சமூகக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர்.

இவர் எழுதிய நூல்கள் பின்வருமாறு:

 1. அழகுராணி
 2. இனமொழி வாழ்வுரிமைப் போர்
 3.  உரிமை வாழ்வு, 1956, பாரி நிலையம், சென்னை.
 4. தமிழர் திருமணமும் இனமானமும்
 5. தமிழினக்காவலர் கலைஞர்
 6. தமிழ்க்கடல்
 7. தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி
 8. தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்
 9. தொண்டா? துவேஷமா? 1953, பாரி நிலையம், சென்னை. (தி.மு.க. பார்ப்பனர்களைச் துவேஷிக்கிறதா தமிழாக்கத்திற்கு தொண்டுபுரிகிறதா என விளக்கும் நூல்)
 10. நீங்களும் பேச்சாளர் ஆகலாம்
 11. வகுப்புரிமைப் போராட்டம், 1951; மக்கள் மன்றம், பவழக்காரத்தெரு, சென்னை.
 12. வளரும் கிளர்ச்சி, 1953, பாரி நிலையம், சென்னை.
  (டாக்டர் நாயர் காலத்திலிருந்து 1953 வரை திராவிட இயக்கத்தின் வரலாறு)
 13. விடுதலைக் கவிஞர் விவேகானந்தர்  விழைந்த மனிதகுலத் தொண்டு
 14. பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள்

இவர் வெற்றிச்செல்வி என்பவரை மணந்தார். இவர்களுக்கு 17.2.1952ஆம் நாள் ஓர் ஆண் குழந்தை பிறந்தது.வெற்றிச்செல்வியின் மறைவிற்குப் பின்னர் சாந்தகுமாரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு ஆகிய இரு ஆண்மகன்களும் ஜெயக்குமாரி என்னும் ஒரு பெண்மகளும் பிறந்தனர். சாந்தகுமாரி 23.12.2012 ஆம் நாள் மறைந்தார்.

நட்புக்கு இலக்கணம் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த நட்புடன் விளங்கியவர்கள் கருணாநிதியும், பேராசிரியர் அன்பழகனும். கருணாநிதியுடன் வாழ்வில் பல நிகழ்வுகளில் ஒன்றாக இருந்த அவர் தனது நண்பரின் இறுதி நிகழ்வில் அவரையே வெகு நேரம் வெறித்து பார்த்தபடி நின்றுவிட்டு சென்றார்.

கருணாநிதி தன்னுடைய 18வது வயதில் 1942ம் ஆண்டு முதன்முதலாக க.அன்பழகனை சந்தித்தார். அண்ணா பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர் தலைவராக இருந்த அவரை தன்னுடைய இளைஞர் பெருமன்றத்துக்கு பேச அழைத்தபோது முதன்முதலாக சந்தித்தார். அதன் பின்னர் திமுக ஆரம்பிக்கப்பட்டு, 15 எம்.எல்.ஏக்கள் முதன் முதலாக சட்டப்பேரவைக்குள் சென்றபோது இவர்கள் நட்பு இறுகியது. அதன் பின்னர் எம்ஜிஆர் நீக்கம், நெடுஞ்செழியன் போன்றோர் வெளியேற்றத்துக்கு பின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற அன்பழகன் தலைவரான கருணாநிதியின் நட்பு தொடர்ந்தது.

76 ஆண்டுகால நட்பு, இதில் வெற்றி, தோல்வி, அவமானம், சிறைவாசம், நெருக்கடிநிலை, இரண்டு முறை கட்சி பிளவு பட்டது, ஒன்றாக பதவியை துறந்தது, குடும்ப விழாக்கள், கருணாநிதியின் திருமணம், அவரது பிள்ளைகளின் திருமணம், பேரன் பேத்திகளின் திருமணம், ஓய்வில் ஒதுங்கி நோயுற்ற காலம் என அனைத்திலும் ஒன்றாக இருந்துள்ளார் அன்பழகன்.

கடந்த ஏப்ரல் மாதம் கருணாநிதியைக் காண அன்பழகன் சென்றார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென அன்பழகனின் கையை பிடித்து அந்த இயலாமையிலும் தன்வசம் இழுத்த கருணாநிதி, தன் வாழ்வோடு எப்போதும் இணைந்திருந்த அந்த கைக்கு முத்தம் கொடுத்தார்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது அப்போது உயர்ந்த மொழி! அப்படி இருந்த காலத்தில் சமஸ்கிருதத்திற்கு இங்கே வேலையில்லை. யாரோ சில பேர் இங்கே சமஸ்கிருதம் படித்தார்கள். அவர்கள்தான் பிராமணர்கள். நம்முடைய கோவில்களில் எல்லாம் சமஸ்கிருதம் ஆக்கிரமிக்கவில்லை.

அப்போது நம்முடைய வீட்டுத் திருமணங்களை பிராமணர்கள் நடத்துகின்ற ஒரு நிலை கிடையாது. அது ஒரு காலம். அந்தக் காலம் மாறிப் போய் எவ்வளவோ ஆண்டுகள் ஆகி, ஆரிய ஆதிக்கம் மெல்ல மெல்ல வேரூன்றியது.

தந்தை பெரியார் சொல்வார். ஆரிய ஆதிக்கம் என்பது பாம்புப் புற்றுக்கு பால் வார்ப்பதைப் போல. நாம் அதை ஆதரித்து விட்டோம். நம்முடைய அறியாமை என்று.

அந்த ஆரிய கலாச் சாரத்தை எதிர்ப்பதுதான் தமிழருடைய பாதுகாப்பு என்று பிராமண அறிஞர்களே சொன்னார்கள். பி.டி.சீனிவாச அய்யங்கார் என்ற வரலாற்றுப்

பேரறிஞர் எழுதினார். தமிழருடைய கலாச்சாரம் ஆரியத்தால் கெட்டுப் போய்விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *