827 ஆபாச இணையதளங்களை முடக்கிறது மத்திய அரசு.

0
318

இளைய தலைமுறை பல பேர் தனிமையில் ஆபாச இணைத்தளங்களிலே முழ்கி தனது பாதி வாழ்க்கையினை தொலைத்து விடுகின்றனர். மேலும் இந்தியர்களை குறிவைத்து ஏராளமான ஆபாச இணையதளங்கள் மிகப்பெரிய சந்தையாக இயங்கி வருகின்றன.

இதனை முடக்க வலியுறுத்தி, உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த  நீதிபதிகள் பாலியல் ரீதியான பிரச்சனைகள் வருவதைக் கருத்தில் கொண்டு 857 ஆபாச இணையதளங்களை முடக்க, கடந்த மாதம் 27-ம் தேதி உத்தரவிட்டனர்.

ஆனால், 857 இணையதளங்களில் 30 தளங்கள் ஆபாச தகவல்கள் இல்லை என்பதை உறுதி செய்த தொழில்நுட்ப அமைச்சகம் மீதமுள்ள 827 ஆபாச இணையதளங்களை முடக்க தொலைதொடர்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற, Meity-யின் வழிமுறைகளின்படி, 827 ஆபாச இணையதளங்களையும்  இணையசேவை வழங்கும் நிறுவனங்கள் தடை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here