காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்

0
293

இன்றைய சூழலில் பல பேர் காலை உணவை சரியாக சாப்பிடுவதில்லை. ஆனால் காலை உணவு உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியம். அப்படி காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

மூளை சுறுசுறுப்பை இழக்கும். காலை உணவை தவிர்க்கும் போது உடலானது ஆற்றலை இழந்துவிடும். இதனால் மூளைக்கு தேவையான எனர்ஜி கிடைக்காமல் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைந்து கவனச்சிதறல் ஏற்படும்.

சரியான முடிவுகளை எடுக்க முடியாது. மனநிலையில் மாற்றம் வரும்.

எதற்கெடுத்தாலும் எரிச்சல் தோன்றும். ஒருவேளை உணவைத் தவிர்ப்பதால் அடுத்த வேளை உணவை அதிகம் எடுத்துக் கொள்ள தோன்றும்.அடிக்கடி சாப்பிட வேண்டும் என்கிற மனநிலையை தூண்டும்.

தொடர்ந்து காலை உணவை தவிர்ப்பதால் உடல் எடை கூடும். ஆகவே காலை உணவு மிகவும் அவசியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here