2019ல் வருகிறது உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்

0
352

2019ம் ஆண்டின் தொடக்கத்தில் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடப்போவதாக ஒன் பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

5ஜி ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்க்கான துரிதப் பணியில் ஒன் பிளஸ் நிறுவனம் களம் இறங்கியுள்ளது.

முதல் விற்பனை இங்கிலாந்தில் துவங்கும் என ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லா தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டில் மே மாதத்துக்குள் ஒன்ப்ளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என நம்புகிறோம்” என்றார்.

இதையடுத்து விரைவில் தனது 5ஜி ஸ்மார்ட்போனை சாம்சங் வெளியிடும் என எதிர்பார்க்கிறது.