பிளாஸ்டிக் தடையால் உண்டாகும் பலன்கள் என்ன?

0
357

வாழை மற்றும் தாமரை இலைகள், பாக்குமட்டைத் தட்டுகள்,காகிதம், துணி உள்ளிட்டவற்றை மாற்றாகப் பயன்படுத்த அரசு பரிந்துரைத்துள்ளது. இதனால் வாழை உற்பத்தி அதிகமாகும்.

அதன் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் சற்று உயரும்.தற்போது குளங்களில் தாமரை இலைகளைவிட, ஆகாயத்தாமரைகளே அதிகமாக இருக்கின்றன. தாமரை இலையின் தேவைகள் அதிகரிக்க, தாமரை பெருகி, குளங்களும் சுத்திகரிக்கப்படும். இதனால் நீர்நிலைகள் மாசுபடுவது தடுக்கப்படும்.

நீர் வளம் அதிகரிக்கும் காகிதங்களைப் பயன்படுத்த வேண்டுமென்றால், அதிக மரங்களை வெட்ட வேண்டிய சூழல் ஏற்படும். இதைத் தடுக்க, கரும்புச்சக்கைகளை கொண்டு பேப்பர்கள், செய்தித்தாள்களின் மறுசுழற்சி, யானை சாணத்தின் மூலம் காகிதம் தயாரித்தல் உள்ளிட்ட புதிய மாற்று வழிகளை முன்னெடுக்க வாய்ப்பு உருவாகும்.

பாக்குமட்டைத் தட்டுகளால் சிறு தொழில், சுயதொழில் உள்ளிட்டவை வளர்ச்சியடையும். வேலையின்மையும் வறுமையும் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here