இருமல் குணமாக இதை சாப்பிடுங்கள்

0
47

பசும்பாலில் மஞ்சள் பொடியையும், சிறிது மிளகுப் பொடியையும் போட்டு காய்ச்சி நன்றாக கொதி வந்ததும் இறக்கி, பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுங்கள். இரண்டு மூன்று வேலைகளிலேயே இருமல் சரியாகிவிடும்.

இலுப்பை பூவை கஷாயம் வைத்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். இந்த கஷாயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்மை குறைவு நிவர்த்தியாகும். ஒரு அவுன்ஸ் கசாயத்தை 2 மில்லி பசும்பாலில் சேர்த்து சாப்பிட்டு வரும் பொழுது, விசேஷ பலனைக் கொடுக்கும்.

வரட்டு இருமலுக்கு 200 மில்லி லிட்டர் தண்ணீரில், ஒரு அவுன்ஸ் துளசி சாற்றை கலந்து போதுமான கற்கண்டையும் அதில் போட்டு, நன்றாக காய்ச்சி வைத்துக்கொண்டு, தினமும் மூன்று வேளை, மூன்று அவுன்ஸ் அளவு இதை சாப்பிட்டு வர குணமாகும்.

கற்கண்டுடன் சீரகத்தை சேர்த்து, வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், இருமல் நின்று விடும்.

எலுமிச்சை பழச்சாறு, தேன், கிளிசரின் சமபாகம் கலந்து மூன்று வேளை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட இருமல் குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here