வெள்ளரிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்

1
413

வெள்ளரிக்காய் இதன் பிஞ்சும் காயும் கோடைக்கேற்ற
இதமான உணவுகள், வெள்ளரிக்காய் தினசரி கொஞ்சம் சாப்பிட்டுவந்தால், சிறுநீர்ப்பாதை எரிச்சல் தீரும். சிறு நீர் இயல்பாகும். நா வறட்சி தீரும். உணவு உட்கொண்ட பிறகு சாப்பிட ஏற்றது இது.

வெள்ளரி விதை வாய்ப்புண்ணை போக்கும் மருந்து.”சரியான உறக்கம் இல்லாததாலும், வயதாவதாலும் பலருக்குகண்களுக்குக் கீழே கருவளையங்கள் உண்டாகும். இவற்றைத்தவிர்க்க வெள்ளரியை விட சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.

வெள்ளரிக்காயை அரிந்து நசுக்கி, அதிலிருந்து சாறினை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்தச் சாறில் பஞ்சை முக்கி எடுங்கள்.கண்களை மூடிக்கொண்டு, கண்கள் மீது அந்தப் பஞ்சை வையுங்கள்.பதினைந்து நிமிடங்கள் இப்படி வைத்து எடுத்தால் கண்கள் குளிர்ச்சியாகும். கருவளையங்கள் மாயமாகும்.

இது தவிர,வெள்ளரியை அப்படியே சிறுசிறு துண்டுகளாக அரிந்தும் கண்கள் மீது வைக்கலாம்.பனிக்காலத்தில் உதடுகள் சிலருக்கு வெடித்து விடும் ரத்தக்கசிவே ஏற்படும் அளவுக்கு இது சிலருக்கு மோசமாகும்.இதற்கும் தீர்வாக இருப்பது வெள்ளரியே!

வெள்ளரியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி உதடுகள் மீது அப்படியே வைத்திருக்க வேண்டும். பத்து நிமிடங்கள் வைத்திருந்து எடுத்துவிடவும். இப்படி தினசரி செய்தால் உதடு வெடிப்பு சரியாகும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here