இஞ்சியை இதற்கும் பயன்படுத்தலாம் தெரியுமா?

0
264

இஞ்சி செடியின் வேரைத்தான் நாம் இஞ்சியாக சாப்பிடுகிறோம். இதில் ஜிஞ்சரால், ஜிஞ்சிபெய்ன், மாவுசத்து, புரோட்டீன் அதிகம் உண்டு.

இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தும்’முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளன. வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்வதற்கும் வாந்தியை நிறுத்துவதற்கும் இதை 2 ஆயிரம் ஆண்டுகளாக மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர் சீனர்கள்.

சிறுநீரகப் பாதை சம்பந்தமான தொற்றுநோய்களை குணப்படுத்த இஞ்சியை உபயோகித்தனர். மருத்துவர்கள் மூட்டு வலிக்கு இஞ்சி சிறந்த மருந்து என நவீன மருத்துவமே ஒப்புக் கொண்டிருக்கிறது.

261 மூட்டுவலி நோயாளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் தினமும் இரண்டு வேளை.சில சொட்டுகள் இஞ்சிச் சாறு உட்கொள்ளும் நோயாளிகளுக்கு,மூட்டுவலியிலிருந்து நல்ல நிவாரணம் கிடைத்ததாம்.

வாந்தியை சமாளிக்கும் ஆற்றலையும் தரவல்லது இஞ்சி. கருவைச்சுமக்கும் அதிர்ஷ்டம் வாய்க்கும் பெண்களில் முக்கால்வாசி பேருக்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் இனிமையான அவஸ்தை.

கர்ப்பம் என்றால் காலையில் தூங்கி எழுந்ததும் குமட்டிக் கொண்டுவரும் வாந்திதான் அவஸ்தைக்குக் காரணம்.வாந்தியைத் தடுக்கும் மருந்து எதையாவது எடுத்துக் கொள்ளலாம் என்றால், அந்த மருந்தால் கருவிலிருக்கும் சிசுவுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் என்ன செய்வது? என்ற பயம் நம் முன் நிற்கிறது.

பக்க விளைவுகள் இல்லாத வாந்தி தடுப்பு மருந்தாக இஞ்சியை பயன்படுத்தலாம். இஞ்சி மசக்கை வாந்தியையும் தவிர்க்கும் அருமருந்தாக பயன்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here